செய்திகள்

7ம் வகுப்பு மாணவனின் திருமண ப்ரபோஸால் அதிர்ச்சியில் நடிகை பூனம் பாஜ்வா..!(Actress Poonam Bajwa shocked by 7th standard student’s marriage proposal)

நடிகை பூனம் பஜ்வா அண்மையில் ஒரு விசயத்தால் அதிர்ச்சியடைந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராமில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக பூனம் பஜ்வா கூறி இருக்கிறார்.

“உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது. திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு வயது குறைவாக இருக்கிறது. எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்க. வயது வித்தியாசம் பிரச்சனை இல்லை. இப்போ ட்ரெண்ட் மாறிவிட்டது.

எனது அம்மாவையும் convince செய்துவிட்டேன். நீங்க கிளாமராக தொடர்ந்து நடிக்கலாம்” என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டு இருந்ததாக பூனம் பஜ்வா பேட்டியில் கூறி இருக்கிறார்.

அந்த மெசேஜுக்கு என்ன பதில் அளிப்பது என்று கூட எனக்கு தெரியவில்லை, அதனால் ரிப்ளை செய்யாமல் விட்டுவிட்டதாக அவர் கூறி இருக்கிறார்.

Actress Poonam Bajwa

Similar Posts