செய்திகள்

என் நிலைமைக்கு காரணம் வடிவேலுதான் கண்ணீரில் நடிகை பிரேமா பிரியா…!(Actress Prema Priya is in tears because of Vadivel)

தமிழ் சினிமாவில் காமெடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை பிரேமா பிரியா. இவர் நடிகர் வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவர் இறந்து விட்டார். பிரேமா பிரியாவிற்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சமீபத்திய‌ பிரேமா பிரியா பேட்டியில்,

என் கணவர் இறந்த பிறகு, சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறேன். என் மகளை படித்து வைத்து வருகிறேன். அவரது எதிர்காலம் மட்டுமே என்னிடம் தெரிதாக உள்ளது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு நடிகர் வடிவேலுதான் காரணம்.

அவர் ‘சுறா’ படத்தில் நடித்த போது, அவருடன் எனக்கு ஒரு காட்சி இருந்தது. ஆனால் வடிவேலு என்னை அந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறி வேறு ஒரு நடிகையை போட்டார். இதனால் நான் அவரிடம் நேரடியாக சண்டை போட்டேன். நான் சண்டை போட்டதால் எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது.

சமீபத்தில் என் கணவரும் இறந்துவிட்டதால் வாழ்க்கை மோசமாக போய்க் கொண்டிருக்கிறது என்று கண்ணீருடன் பேசினார்.

Actress Prema Priya

Similar Posts