செய்திகள்

இயக்குனருக்காக கண்கலங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்..!(Actress Priya Bhavani Shankar who was sad for director)

தாய் செல்வம் இயக்கிய கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் மூலம் நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் தாய் செல்வம் காலமானார். இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர். பிரியா பவானி சங்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “KMKV யின் இயக்குனர் தாய்முத்து செல்வத்தின் மறைவு பல நினைவுகளை கொண்டு வருகிறது.

அந்த மனிதர் தன் கோபத்திற்கு பெயர் பெற்றவர் ஆனால் என்னைப் பொறுத்தவரை பொறுமையாக இருப்பார். தவறை செய்ய விட்டு அதிலிருந்து கற்றுக் கொடுப்பவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுள் வெறுமையாக உணர்கிறேன்.

என்ன சொல்வது & எப்படி உணர்வது. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் சார்” என பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

Actress Priya Bhavani Shankar

Similar Posts