செய்திகள்

ஜவான் படத்தில் பாடலுக்கு நடனமாடும் நடிகை பிரியாமணி..!(Actress Priyamani will dance to the song in the movie Jawaan)

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ‘ஜவான்’ படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார்.

அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இப்பாடலும் நல்ல வரவேற்பைப் பெரும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

Actress Priyamani

Similar Posts