செய்திகள் | சின்னத்திரை

எஸ்.ஏ.சந்திரசேகரின் கிழக்கு வாசல் சீரியலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகை ராதிகா அறிவித்துள்ளார். | Actress Radhika has announced the official announcement of SA Chandrasekhar’s Kizhaku Vaasal serial.

தளபதி விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது சின்னத்திரையிலும் நுழைந்துள்ளார்.

Actress Radhika

ஆம், விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் தான் கிழக்கு வாசல்.

இந்த சீரியலை நடிகை ராதிகாவின் ரடான் மீடியா தயாரிக்கிறது. இந்த சீரியலில் எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைந்து ஆனந்த் பாபு, சஞ்சீவ், ரேஷ்மா உள்ளிட்ட பல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த சீரியல் குறித்து தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக நடிகை ராதிகா அறிவித்துள்ளார். விரைவில் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் வாழ்க்கை நம்மை பல்வேறு பயணங்களுக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. விஜய்டிவியில் ‘கிழக்கு வாசல்’ தொடங்கும் போது அனைவரின் நல்வாழ்த்துக்கள் தேவை. ஒரு பெரிய குழுவினருடன். நல்ல அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts