பொம்மை கூட வாங்க வசதியில்லை, நடிகை ராஷ்மிகா மந்தனா..!(Actress Rashmika Mandhana can’t even afford to buy a toy)
வெளிவர இருக்கும் தளபதி விஜயின் திரைப்படம் வாரிசு. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.இந்தியில் வெளியான சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு பேசப்பட்டது.
அதிக சொத்துடையவர் என்று அவர் வீட்டில் வருமான வரிசோதனை நடந்தது. இந்த நிலையில் சிறுவயதாக இருக்கும்போது ஏற்பட்ட பண கஷ்டங்களை ராஷ்மிகா மந்தனா தற்போது பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ”எனது சிறுவயதில் பெற்றோர் பண நெருக்கடியில் மிகவும் கஷ்டப்பட்டனர்.
அவர்கள் கையில் பணம் இருக்காது. குடும்பத்தில் கஷ்டம் நிலவியது. வீட்டு வாடகை கொடுக்கவும் பணம் இல்லாமல் சிரமப்பட்டோம். இரு மாதங்களுக்கு ஒரு தடவை வீடு மாறும் அளவுக்கு கஷ்ட நிலைமை இருந்தது. பெற்றோரால் எனக்கு ஒரு பொம்மை கூட வாங்கி தர முடியவில்லை” என்றார்.
