செய்திகள்

5 நிமிடங்கள் விடாமல்..நடிகை ரேகா சோகம்..!(Actress Rekha sad, 5 minutes without letting go)

ஜெமினி கணேசனின் மகளான ரேகா, தனது 15-வது வயதில் அஞ்சனா சஃபர் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

கோதல்லி சிஐடி 999 என்கிற படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில், தற்போது அவரது சுயசரிதை புத்தகத்தை யசீர் உஸ்மான் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் தான் நடித்த முதல் பாலிவுட் படமான அஞ்சனா சஃபர் திரைப்படத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்துள்ளார் ரேகா.

அஞ்சனா சஃபர் படத்தில் பெங்காலி நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேகா. அப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 15 தான்.

அப்போது ரேகாவிடம் தெரிவிக்காமலே அப்படத்தின் இயக்குனர் ராஜா நவாதே ஒரு 5 நிமிட முத்தக் காட்சியை படமாக்கினாராம். இந்தக் கொடுமை குறித்து பேசியுள்ள ரேகா, இயக்குனர் ராஜா நவாதே ஆக்‌ஷன் சொன்னதும் நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜி சட்டென என் உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

 அப்போது நான் அழுது கண்ணீர் சிந்தினேன். அதைக் கூட கவனிக்காமல் படக்குழுவினர் கேமராவுக்கு பின்னால் இருந்துகொண்டு கை தட்டியும், விசில் அடித்தும் சிரித்தனர்.

இத்தனை ஆண்டுகளாக இதனை வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த ரேகா தற்போது தனது சுயசரிதை மூலம் அதுகுறித்து மனம்விட்டு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Rekha

Similar Posts