செய்திகள்

சினிமாவிற்கு முழுக்கு போடும் நடிகை சாய் பல்லவி..!(Actress Sai Pallavi dives into cinema)

நடிகை சாய் பல்லவி தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நன்றாகவும் நடனமாட தெரிந்ததால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

ஆனாலும் தன்னால் படித்த படிப்பிற்கு வேலை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேரமும் மருத்துவராக பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக கோவையில் ஒரு புதிய மருத்துவமனை ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூடிய விரைவில் சாய் பல்லவி மருத்துவராக பணியாற்றப் போகிறார் என்றும் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் என்றும் தகவல் வெளியானதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Actress Sai Pallavi

Similar Posts