புஷ்பா படத்தில் இணைந்த நடிகை சாய் பல்லவி | Actress Sai Pallavi joined in Pushpa move
2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

இந்த மாதம் நடைபெறவிருக்கும் புஷ்பா படப்பிடிப்பில் சாய் பல்லவி கலந்துகொள்ளவிருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர். இதில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.