செய்திகள்

சாகுந்தலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கண்கலங்கிய ந‌டிகை சமந்தா..!(Actress Samantha cried at the Saguntalam trailer launch)

ந‌டிகை சமந்தா திடீரென மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே. தொடர்ந்து நேற்று ஐதராபாத்தில் நடந்த சாகுந்தாலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் சமந்தா.

Actress Samantha

இவ்விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் குணசேகர், இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி பேசினார். அவரின் பேச்சைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார்.

Actress Samantha

சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், இறுதியில் தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்ததாகவும் குணசேகர் கூறினார்.

Actress Samantha

அதன்பின்னர் பேசிய சமந்தா, “இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும்.

Actress Samantha

ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை” என பேசினார் சமந்தா.

Similar Posts