சாகுந்தலம் வெற்றி பெற கோவிலில் வழிபாடு செய்யும் நடிகை சமந்தா | Actress Samantha worships at the temple to win Sagunthalam
நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்து சாகுந்தலம் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை தொடங்கினார். புராணக்கதையான சாகுந்தலம் கதையைக்கொண்டு தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் சாகுந்தலம். இந்த காவியத்தில் வரும் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.

சமந்தாவின் சாகுந்தலம் ருத்ரமா தேவி படத்தை இயக்கிய குணசேகரன் சாகுந்தலம் திரைப்படத்தை இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் நம்பவர் மாதம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் படம் வெளியாகவில்லை தற்போது ஏப்ரல் 14ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்து சாகுந்தலம் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை தொடங்கினார். வெள்ளை உடையில் அழகாக இருந்த சமந்தா, கையில் சாகுந்தலம் என எழுதப்பட்டிருந்த தட்டில், பூ, புடவை, வளையளுடன் கோவிலுக்கு வந்திருந்தார். அவருடன் படத்தின் நாயகன் தேவ் மோகனும், படக்குழுவினரும் உடன் இருந்தனர்.
