செய்திகள்

நடிகை சமந்தாவின் யசோதா ஓ.டி.டி யில் வெளியிட தடை..!(Actress Samantha’s Yashoda banned from publishing in OTT)

சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘யசோதா’ படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.28 கோடி வசூலித்துள்ளது.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. நிஜமாகவே ஐதராபாத்தில் படத்தில் குறிப்பிட்டுள்ள பெயரில் ஒரு ஆஸ்பத்திரி இயங்குகிறது.

அந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் யசோதா படத்துக்கு எதிராக ஐதராபாத் சிட்டி உரிமையியல் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

எங்கள் மருத்துவனை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யசோதா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.டி.டி.யில் யசோதா படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ஆம் தேதி வரை வெளியிடத் தடை விதித்தும் பட நிறுவனத்துக்கு அறிக்கை அனுப்பியும் உத்தரவிட்டார்.

Actress Samantha

Similar Posts