செய்திகள்

தனிமையில் இனிமை காணும் நடிகை ஸ்ருதி ஹாசன் | Actress Shruti Haasan finds happiness in solitude

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளார். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் 7ம் அறிவு என்ற படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Actress Shruti Haasan finds happiness in solitude

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த இவர் பாலிவுட்டிலும் தற்போது படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வீரசிம்ஹ ரெட்டி, வால்டர் வீரய்யா என இரண்டு படங்கள் தெலுங்கில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன.

Actress Shruti Haasan finds happiness in solitude

தற்போது கேஜிஎப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிகமான சுற்றுப்பயணங்களை விரும்புபவராக உள்ள ஸ்ருதிஹாசன் தற்போது கொடைக்கானலில் சுற்றுலா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனியாகவே இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts