திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் – சித்தி இட்னானி (Actress Siddhi Idnani)

சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் தமிழில் தோன்றி ரசிகர்களால் ஈர்க்கப்பட்டவர் நடிகை சித்தி இட்னானி…ரசிகர்கள் மத்தியில் டிம்பிள் குயின் என்று அழைக்கப்படுகிறார் சித்தி.
நடிகையாவதற்கு முன்பு
சித்தி இத்னானி மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் அசோக் இத்னானி (வாய்ஸ் மாடுலேஷன் மற்றும் மென் திறன் பயிற்சியாளர்) ஃபால்குனி டேவ் (நடிகை) ஆகியோருக்கு 10 ஜனவரி 1996 ஆண்டு பிறந்தார். R. D. தேசிய கல்லூரி, மும்பையில் தனது படிப்பை முடித்தார். மற்றும் மாஸ் மீடியாவில் கல்வித் தகுதி பட்டப்படிப்பபை பூர்த்தி செய்துள்ளார்.


2014 ஆம் ஆண்டில், சித்தி ‘க்ளீன் அண்ட் க்ளியர் பாம்பே டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் 2014’ இல் பங்கேற்று மூன்றாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதன் பின் மாடலிங் மற்றும் பேஜண்ட் பயிற்சியைப் பெற ‘தி டியாரா பேஜண்ட் அண்ட் மாடல் டிரெய்னிங் ஸ்டுடியோ’வில் சேர்ந்தார்.
மற்றும் குஜராத்தி வணிக நாடகமான ஆஜே ரவிவார் செக் மூலம் அறியப்பட்ட நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நாடகக் கலைஞராகப் பணிபுரிந்து பல நாடகங்களில் நடித்தார். அவரது அழகான தோற்றத்திற்காக புகழ் பெற்று படங்கள் நடிக்கத்தொடங்கினார்.
முதலாவது குஜராத்தி திரைப்படத்தில்
அவரது முதலாவது திரைப்பட வாழ்க்கையை குஜராத்தி திரைப்படமான கிராண்ட் ஹாலி (2016) மூலம் தொடங்கினார். கிராண்ட் ஹாலி இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. ஒரு வீட்டு வேலை செய்பவர் தனது குற்ற உணர்ச்சிக்காக கூட்டுக் குடும்பத்தில் குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தினால் என்ன நடக்கும் என்பதுதான் கதையின் கரு.அப்படம் மூலம் குஜாராத் மக்களால் அறியப்பட்டார்.

மிஸ் இந்தியா
இதனிடையில் செப்டம்பர் 2017 இல், அவர் ‘மிஸ் டிஜிபிசி வெஸ்ட் 2017’ பட்டத்தையும் வென்றார். (‘சித்தி இட்னானி – மிஸ் டிஜிபிசி வெஸ்ட் 2017).

டியாரா கேர்ள் சித்தி இத்னானி மிஸ் சூப்பர்டேலண்ட் ஆஃப் வேர்ல்ட் 2018 போட்டியில் இந்தியாவை பெருமைப்படுத்தினார்.


தெலுங்கில் அறிமுகம்
அதன் பின் ஜம்ப லகிடி பம்பா (2018) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகையாக அறிமுகமானார். இது ஒரு காமெடி திரைப்படமாகும். ஜே பி முரளி கிருஷ்ணா இதை இயக்கியிருந்தார். கோபி சுந்தர் இசையமத்திருந்தார். விதியால் ஒன்று சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் எதிர்பாராத சில திருப்பங்களால் விவாகரத்தின் விளிம்பில் தள்ளப்பட்ட கதையாகும். இதில் சீனிவாச ரெட்டி, வெண்ணிலா கிஷோர், கிருஷ்ணா முரளி, போசானி கிருஷ்ணா போன்ற தெலுங்கு நட்சத்திரங்களுடன் நடித்திருந்தார். காமெடி திரைப்படமென்பதால் பலரால் அறியப்பட்டார்.

அதன் பின் நந்திதா ஸ்வேதா மற்றும் சுமந்த் அஷ்வினுடன் அவரது இரண்டாவது வெளியீடான பிரேம கதா சித்திரம் 2, (2019) என்ற தெலுங்கு மொழி திகில் திரைப்படத்தில் தோன்றினார். இது ஜே பிரபாகர் ரெட்டி மற்றும் மாருதி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான பிரேம கதா சித்திரம் படத்தின் தொடர்ச்சியாகும். கல்லூரித் தோழியின் மீதான அவளது அலாதியான காதல் ஒரு இளம் பெண்ணைத் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வழிவகுக்கிறது. அவளுடைய இதயத்தை உடைத்தவர்களை வேட்டையாட அவளுடைய ஆவி திரும்பும்போது விஷயங்கள் இருண்ட திருப்பத்தை எடுக்கும். அதுவே கதையாகும். இக்கதையில் பிந்துவாக நடித்திருப்பார். படத்தின் இந்தி டப்பிங் உரிமை 1.5 கோடிக்கு விற்கப்பட்டது.

பின்னர் இயக்குனர் பாலு அடுசுமில்லி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு இந்திய தெலுங்கு மொழி நகைச்சுவைத் திரைப்படமான அணுகுநடி ஒகடி அயினடி ஒகடி என்ற படத்தில் தன்யா பாலகிருஷ்ணா, த்ரிதா சவுத்ரி, கோமலி பிரசாத்துடன் சித்தி இத்னானி நடித்தார். கோவாவிற்கு விடுமுறைக்காகச் செல்லும் நான்கு நவீனப் பெண்களைச் சுற்றி சுழல்கிறது, அங்கு அவர்கள் ஒரு விபச்சாரி ஆணை கொலை செய்ய நேரிடுகிறது. அதற்காக போராடும் கதையாகும். விரக்தியடைந்த திருமணமான மனைவியாக நடித்துள்ளார். அவரது நடிப்பு திறமை ஓரளவு பாராட்டப்பட்டது.

தமிழில் அறிமுகம்
அதன் பின் தான் தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு (2022) திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகினார். முக்கிய வேடத்தில் கதாநாயகியாக கலக்கியிருந்தார். இதில் நடித்ததற்காக “பாவை” என்று விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆனது. அதன் தொடர்ச்சியும் உருவாகி வருகிறது. இப்படத்தில் மல்லிப்பூ பாடலும் பிரபலமானது. சித்தி இத்னானி சிம்புவின் காதலி மற்றும் மனைவியாக தன் நடிப்பை காட்டி ரசிகர்கள் மத்தியில் ப்ரும் கிரஸ் ஆனார்.

வெளியான முதல் நாளில், இப்படம் உலகம் முழுவதும் ₹12 கோடிக்கு மேல் வசூலித்தது, மேலும் இப்படம் தமிழ்நாட்டில் ₹8.25 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் உலகம் முழுவதும் ₹90 கோடிக்கு மேல் வசூல் செய்து அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக ஆனது. சிலம்பரசனுடன் நடித்ததால் பிரபலமும் ஆனார் நடிகை.
கையிலிருக்கும் திரைப்படங்கள்
இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுடன், சித்தி இத்னானி நூறு கோடி வானவில் என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் அண்மையில் வெளியிட்டிருந்தார். இதில் பென்னியாக நடிக்கிறார்.

மற்றும் ஆர்யாவின் ஆர்யா32 திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ஆர்யாவுடன் நடிப்பதற்கான முஹூர்த்த பூஜையும் இடம்பெற்று புகைப்படங்கள் வெளியாகின. படத்திற்கு காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்று பெயரிட்டுள்ளது. அதனின் ட்ரெய்லரும் வெளியாகி இருந்தது. கிராமத்து கதையில் நடிக்கிறார் நடிகை.

சிரித்தால் இரு கண்ணத்திலும் குழி விழும் அழகி நடிகை சித்தி இட்னானி தமிழ்த் திரை உலகில் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.