ரூ.32 கோடிக்கு வீட்டை விற்ற நடிகை சோனம் கபூர்..!(Actress Sonam Kapoor sold her house for Rs.32 crore)
ராஞ்சனா இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவருக்கு திருமணம் நடந்து வாயு என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
திருமணத்துக்கு பிறகும் சோனம் கபூர் சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சோனம் கபூர் மும்பையில் உள்ள தனது 5 ஆயிரத்து 533 சதுர அடி கொண்ட ஆடம்பர வீட்டை விற்று இருக்கிறார்.
இந்த வீடு அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 3-வது மாடியில் அமைந்து இருக்கிறது. இதை 2015ல் வாங்கிய வீட்டை தற்போது ரூ.32 கோடிக்கு விலை பேசி விற்று இருக்கிறார்.
