செய்திகள்

நடிகை சன்னி லியோன் தனது 42வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Actress Sunny Leone celebrated her 42nd birthday with her family and the photos are going viral.

ஆபாச நடிகையாக வலம் வந்து ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் தனது நடிப்பால் கவர்ந்திழுத்த சன்னி லியோன் அந்த தொழிலே வேண்டாம் என ஒரு கட்டத்தில் முடிவு செய்து விட்டு பாலிவுட்டில் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Actress Sunny Leone

அதன் பின்னர் 2012ல் ஜிஸ்ம் 2 படத்தில் கவர்ச்சி நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஏகப்பட்ட பாலிவுட் கவர்ச்சி நடிகைகளுக்கு கடும் போட்டியாக சன்னி லியோன் மாறிய நிலையில், பாலிவுட் படங்களை கடந்து மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

Actress Sunny Leone

டேனியல் வெப்பரை திருமணம் செய்துக் கொண்ட சன்னி லியோன் நிஷா எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், வாடகைத்தாய் மூலமாக இரு ஆண் குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் ஓ மை கோஸ்ட் படத்தில் கவர்ச்சி கோஸ்ட்டாக வந்து கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் சன்னி லியோன். ஷீரோ எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சன்னி லியோன் தனது 42வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.சன்னி லியோனுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar Posts