நடிகை டாப்ஸி கவர்ச்சி ஆடையில் கடவுளை அவமதித்தரா? | Did Actress Taapsee Insult God In Sexy Dress?
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் டாப்ஸி.

இதனைத் தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.

தற்பொழுது தமிழில் படவாய்ப்புக் கிடைக்காததால் பாலிவூட்டில் நடித்து வருகின்றார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேஷன் நிகழ்வில் டாப்ஸி அணிந்த ஆடையும், ஆபரணமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கவர்ச்சியான சிகப்பு நிற கவுன் அணிந்து, கழுத்தில் மகாலட்சுமி உருவத்துடன் அவர் அணிந்த நெக்லஸ் தான் இந்த சர்ச்சைக்குக் காரணம். கடவுள் உருவம் பொறித்த நெக்லசை இப்படி கவர்ச்சியான ஆடையுடன் அவர் அணியலாமா என பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
