செய்திகள்

‘ஜெயிலர்’ படத்தில் முதன் முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் நடிகை தமன்னா..!(Actress Tamannaah to pair up for the first time in ‘Jailer’)

ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் ‘ஜெயிலர்’ படத்தில் இணைவது குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.

அந்த வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.

தற்போது லேட்டஸ்ட் தகவலாக தமன்னா இப்படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதன் முறையாக தமன்னா ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Actress Tamannaah

Similar Posts