செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் | Actress Trisha has made her fans happy by posting her birthday celebration photos.

முன்னணி நடிகையான த்ரிஷா இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். அமீர் இயக்கிய மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, 20 ஆண்டுகளில் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

Actress Trisha has made her fans happy by posting her birthday celebration photos.

பிறந்தநாளை முன்னிட்டு சீரடியில் உள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்றுள்ளார் த்ரிஷா. அங்கு பயபக்தியுடன் சாய் பாபாவை வழிபட்ட த்ரிஷா, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். த்ரிஷாவுடன் அவரது நெருங்கிய தோழிகளும் சீரடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளை பார்ட்டியுடன் செலிப்ரேட் செய்யாமல், சாய் பாபா கோயில் சென்று கொண்டாடிய த்ரிஷாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Actress Trisha has made her fans happy by posting her birthday celebration photos.

இந்நிலையில், சீரடி சாய் பாபா கோயிலில் வழிபட்டது, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது, தோழிகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஆகியவற்றை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் த்ரிஷா. மேலும், பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும். என் இதயம் மிக நன்றியுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த புகைப்படங்களை பார்த்த த்ரிஷாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Similar Posts