செய்திகள்

விஜயசாந்தி போன்று அதிரடி நாயகியாக நடிகை வரலட்சுமி..!(Actress Varalakshmi as an action heroine like Vijayashanthi)

வரலட்சுமி சரத்குமார் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஏழுக்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் உள்ளன.

‘அரசி’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜயசாந்தி போன்று அதிரடி நாயகியாக வருகிறார். வில்லன்களுடன் வரலட்சுமி ஆவேசமாக மோதும் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர்கள் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா, எஸ்.வரலட்சுமி ஆகியோர் தயாரிப்பில் சூரிய கிரண் டைரக்டு செய்துள்ளார்.

Actress Varalakshmi

Similar Posts