செய்திகள் | சின்னத்திரை

3 வருசங்கழிச்சு லேடி கெட்டப்ல புகழ் குக் வித் கோமாளியில் | After 3 years later Pukal lady disguise in Cook with Komali

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து மூன்று சீசன்களாக வெற்றிநடை போட்டு வரும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. அதிலும் சீசன் 2 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த சீசனின் அஷ்வின், ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகள்வில் பகிரப்பட்டன.

After 3 years later Pukal lady disguise in Cook with Komali

புகழ் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரமான் அஜித்தோடு அவர் நடித்த வலிமை படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி அவரது கதாபாத்திரத்துக்கு வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் இப்போது புகழ் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள பெரிய நட்சத்திரங்களின் படங்களான எதற்கும் துணிந்தவன், யானை, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக சந்தானம் நடித்த சபாபதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் புகழ். இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முந்தைய சீசனில் பிரபலமான போட்டியாளரான அஸ்வின் நடித்து, சமீபத்தில் வெளியான என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தில் புகழ் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் முதலில் போட்டியாளராகக் கலந்துகொள்ளவில்லை. அதனால் ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் பண்ணுவதாக பேசப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நடிகர் புகழ் சுமார் 3 வருடங்களுக்கு பிறகு லேடி கெட்டப் போட்டு எண்ட்ரி கொடுத்துள்ளார்.முதலில் குஷ்புவின் நீ எங்கே என் அன்பே பாடலுக்கு சோகமாக நடனமாடி எக்ஸ்ப்ரஷன் கொடுத்த புகழ், பிறகு அரைச்ச சந்தனம் பாடலுக்கு அனைவருடனும் சேர்ந்து கலகலப்பாக நடனம் ஆடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Similar Posts