டெல்லியைத் தொடர்ந்து இன்றுகொச்சி-இல் முகாமிடும் சோழர் குழாம் | After Delhi, today will camp at Cochin Chola group
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும்.

அந்தவரிசையில் நேற்று டெல்லிக்கு சென்றனர். இதனையடுத்து இன்று கொச்சின் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.