நடிகர் சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் திரை விமர்சனம்..!(Agent Kannayiram Review)

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவர் தற்போது தெலுங்கில் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் நடித்துள்ளார். படம் நகைச்சுவையா? த்ரில்லரா? வாங்க பாக்கலாம்..
படக்குழு

இயக்கம்:
மனோஜ் பீதா
தயாரிப்பு:
மனோஜ் பீதா
வெளியீடு:
லாபிரிந்த் மூவிஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
சந்தானம், ரியா சுமன், புகழ், ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த், பார்கவ் போலரா
இசை:
யுவன் சங்கர் ராஜா
படத்தின் கதை
தனிப்பட்ட இழப்பால் பாதிக்கப்பட்ட சிறு-நேர முகவராக நடிகர் சந்தானம்(கண்ணாயிரம்), உரிமை கோரப்படாத சடலங்களின் மர்மமான வழக்கை தோண்டி எடுப்பதே கருவாகும்.

சந்தானம் (கண்ணாயிரம்) ஜமீன்தார் குரு சோமசுந்தரத்திற்கும் – இந்துமதிக்கும் பிறக்கும் குழந்தை.ஆனால் அவரது தந்தை தாயை திருமணம் செய்யாமல் கைவிடுகிறார். அவனுடைய தந்தை ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பதால் அவர்களை கைவிட்டு விடுகிறார். கண்ணாயிரமும் அவனது தாயும் அவனது தந்தையின் குடும்பத்திற்கு வேலையாட்களாக இருக்கிறார்கள். சிறு வயதில் இருந்து சந்தானமும், அவரது தாயும் பல அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். ஜமீந்தாரின் முதல் மனைவியும் அவரது மகன்களும் இவர்களை அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சிறுவயதில் தாய் மீது கொண்ட கோபத்தால் சிட்டியில் தனித்து வாழும் சந்தானம் (கண்ணாயிரம்), ஆரம்பத்தில் கிராமத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக சந்தானம் இருக்கிறார். பத்திரிகையாளராக இருக்கும் தன் நண்பனின் உதவியால் ஆங்காங்கே நடக்கும் குற்றங்களை சந்தானம் கண்டுபிடிக்கிறார். ஆனால், இவர் பிரபலமான டிடெக்டிவாக இருக்க ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் தாயின் இறப்பு செய்தி வர கோயம்புத்தூரில் உள்ள சொந்த கிராமத்திற்கு புறப்படுகிறார். ஊருக்குச் செல்லக் கூட கையில் காசு இல்லாமல், லாரியில் லிப்ட்டு கேட்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தவரால், தன் தாயை கடைசியாக ஒரு முறையாவது பார்க்க முடியாமல், குற்ற உணர்ச்சியுடன் காணப்படுகிறார். கண்ணாயிரம்.

அப்போது நண்பர் மூலம் மர்மமான ரயில் தண்டவாள கேஸ் ஒன்று சந்தானத்திற்கு கிடைக்கிறது. தொடர்ச்சியாக ரயில் தண்டவாளம் ஓரம் கிடக்கும் அனாதை பிணங்கள்,அதை பற்றி ஆராய்கிறார்.
இறுதியில் சந்தானம் ஆசைப்பட்ட மாதிரி பிரபலமானாரா? அந்த ரயில் தண்டவாள கேசை கண்டுபிடித்தாரா? யார் கொலை செய்கிறார்கள் ?என்பது தான் படத்தின் சுவாரசியமே.
திறமையின் தேடல்
இயக்குனர் மனோஜ் பீதா கதைக்களத்தை முன்னெடுத்துச் செல்லும் பாதை மிகவும் வித்தியாசமானது.
படத்தில் சந்தானத்தின் நடிப்பு, காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் எல்லாமே அருமையாக இருக்கிறது. மேலும் தனது பங்கை சரியாகப் பெற கடினமாக உழைத்த நடிகரிலிருந்து இது மற்றொரு வித்தியாசமான நடிப்பு.படத்தில் எதற்காக புகழ் வருகிறார் என்று தெரியவில்லை.
ரியா சுமன் ஒரு முக்கிய கதாபாத்திரம் மற்றும் அவரது சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தவில்லை என்றாலும், படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படம் முன்னேற உதவுவதில் அவர் முக்கியப் பங்கு வகிக்கிறார்.முனீஷ்காந்த் மற்றும் புகழின் டைமிங் காமெடிகள் ரசிகர்களின் கவனம் ஈர்க்கின்றன.

யுவனின் இசை படத்திற்கு அதிக அதிர்வை சேர்க்கிறது, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள தொழில்நுட்பம், பார்வையாளர்களை மயக்கும் வகையில் இருக்கிறது. அதுவே ப்ளஸ் பாயிண்ட்.
‘தேனி’ ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு 50-50.
படத்தின் சிறப்பு
சந்தானத்தின் நடிப்பு சிறப்பு.
பின்னணி இசையும், ஒளிப்பதிவும்
காமெடி, சென்டிமென்ட், ஆக்சன்
கிளைமாக்ஸ் அருமை.
படத்தின் சொதப்பல்கள்
ஆரம்பத்தில் பொறுமையாக செல்வது போல் இருக்கிறது.
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்.
விறுவிறுப்பில்லா திரைக்கதை, இயக்கம்
சுவாரஸ்யம் குறைவு
மதிப்பீடு: 2/5

மொத்தத்தில், ஏஜென்ட் கண்ணாயிரம், இது நம்மை ஒரு த்ரில் ரைடுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது.ஆனால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் ஏதோ சந்தானத்தின் அற்புதமான நடிப்புடன் புதிய சந்தானத்தை பார்க்கலாம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.