செய்திகள்

தூக்கி எறிய மனமில்லை என பதிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனர் என்பதும் ’3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில், விரைவில் ஹிந்தி படம் ஒன்றினையும் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் காகிதத்தில் பேனாவால் கதை எழுதுவது ஒருவித உணர்வு. கதையின் பரிணாமம் என்பது முதலாவது எழுதுவது, 2வது அது தட்டச்சு செய்வது அதன்பின் சில மாற்றங்களை சேர்ப்பது என்பது வழக்கமானதாகும். ​​

காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும்போது அதில் இருந்து ஒரு தாளை கூட தூக்கி எறிய எளிதில் மனசு வராது.

ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை படிக்கும்போது அதில் ஏதாவது புதிதாக தோன்றலாம். அதனை அப்டேட் செய்யவே நாம் விரும்புவோம்’ என பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் கருத்துக்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Similar Posts