ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் | Aishwarya Rajinikanth shared photos from the shooting spot of Lal Salaam
3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.3 படத்தை தொடர்ந்து வை ராஜா படத்தை இயக்கியுள்ளார்.தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் எளிமையான பூஜையுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் முஸ்லிம் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக தாடியை வளர்க்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் உள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை முடித்துவிட்டு லால் சலாம் படத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். மிகவும் பழமை வாய்ந்த அம்மன் கோயிலில் இன்றைய தினம் சூட்டிங் நடைபெற்று வருவதாகவும் வெள்ளிக்கிழமையும் அம்மன் கோயிலில் சூட்டிங் நடப்பது தற்செயலாகவும் இருக்கலாம். அல்லது நான் விரும்பும் கடவுள் அதன் பிள்ளையுடன் மறைமுகமாக பேசும் இனிமையான தருணமாகவும் இருக்கலாம் என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
