ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை, வைரம் கொள்ளை |Aishwarya Rajinikanth’s house robbed of jewels and diamonds
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் ‘3’, கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் இருந்து 3.6 ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் புகார் அளித்துள்ளர். அந்த புகார் மனுவில், அந்த நகைகள் அனைத்தும் தனது திருமணத்திற்காக வாங்கப்பட்ட நகை என்றும், கடந்த 18 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தேன்.

கடந்த பிப்ரவரி 10ந் தேதி லாக்கரை திறந்து பார்த்தபோது தான், அதில் நகை இல்லாதது தெரிந்ததாகவும், லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் எனவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா புகார் மனுவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.