செய்திகள் | திரைப்படங்கள்

விடாமுயற்சி ரிலீஸ் தேதியை முடிவு செய்த அஜித் | Ajith decided the release date of Vidamuyarchi

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது அவரது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏகே 62 என அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது விடாமுயற்சி என்ற டைட்டிலில் டேக் ஆஃப் ஆகவுள்ளது. இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.

Ajith decided the release date of Vidamuyarchi

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேபாளம், பூடான் நாடுகளுக்கு பைக் டூர் சென்றுள்ள அஜித் விரைவில் சென்னை திரும்புகிறாராம். அதன்பின்னர் வரும் 22ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளதாம். விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 70 முதல் 90 நாட்களுக்குள் முடிக்க மகிழ் திருமேனி பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஹை பேக்கேஜ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் விடாமுயற்சி, அஜித் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமையும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னதாக ஏகே 62 படத்தை விஜய்யின் லியோவுடன் களமிறக்க அஜித் முடிவு செய்திருந்தார். ஆனால், விக்னேஷ் சிவன் விலகல், மகிழ் திருமேனி என்ட்ரி, ஸ்கிரிப்ட் பைனலைஸிங் என டைட்டில் அப்டேட்டை வெளியிடவே மே மாதம் ஆகிவிட்டது. அதனால், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட அஜித் ஓக்கே சொல்லிவிட்டாராம்.

Similar Posts