அஜித்தின் குடும்ப புகைப்படங்களை பார்த்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் | Ajith fans celebrate after seeing Ajith’s family photos
நடிகர் அஜித்தின் நடிப்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியான துணிவு படம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இதையடுத்து அவரது ஏகே62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். இதன் சூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களில் அஜித், ஷாலினி மற்றும் அவர்களது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்கும் காணப்படுகின்றனர். இதில் அனோஷ்கா, ஷாலினி அளவிற்கு வளர்ந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
