பிறந்தநாள் பரிசாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள AK62 தலைப்பு | AK62 title released by Lyca Productions as a birthday gift.
52வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கப் போகும் ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரசிகர்களின் அத்தனை திட்டுக்களையும் ட்ரோல்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்த லைகா நிறுவனம் நள்ளிரவில் செம சர்ப்ரைஸாக அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்டை அவரது பல கோடி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள அஜித்தின் 62 படமான ‘விடாமுயற்சி’ படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மற்றபடி படத்தின் ஹீரோயின், வில்லன் மற்றும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பி எப்போ ஆரம்பிக்கும் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில், ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் லைகா ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
