அழகில் நடிகை எமி ஜாக்சனை மிஞ்சும் எமி ஜாக்சன் மகன் | Amy Jackson’s son surpasses actress Amy Jackson in beauty
ஒரு பிரிட்டிஷ் நடிகை மற்றும் மாடலாக இருந்த எமி ஜாக்சன் கடந்த (2010) ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் இந்திய சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை எமி ஜாக்சன்.

அப்படத்தின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பு தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய்,விக்ரம் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.

இடையில் இந்திய சினிமா பக்கம் காணாமல் போன நடிகை எமி ஜாக்சன் இப்போது அருண் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.