திரை விமர்சனம்

பெண்ணின் தைரியத்தைக் காட்டும் அனல் மேலே பனித்துளி திரைவிமர்சனம்..!(Anal mele panithuli movie review)

Anal mele panithuli movie review

பெண்களுக்கான, சிறுமிகளுக்கான விழிப்புணர்வு படம்தான் அனம் மேலே பனித்துளி. பெண்களுக்குத்தான் ஆயிரம் அறிவுரை சொல்லப்படுகிறதே தவிர ஆண்களுக்கு யாரும் அறிவுரையோ எச்சரிக்கையோ தருவது இல்லை. வக்கிர புத்தி கொண்ட ஆண்களை சிக்க வைத்தாரா ஆன்ட்ரியா. கதையை பார்க்கலாமா..?

படக்குழு

Anal mele panithuli movie review

இயக்கம்:

ஆர். கைசர் ஆனந்த்

தயாரிப்பு:

வெற்றி மாறன் 

வெளியீடு:

சோனி லைவ் ஓடிடி

முக்கிய கதாபாத்திரங்கள்:

ஆண்ட்ரியாஜெரேமியா, ஆதவ் கண்ணதாசன், அழகு பெருமாள், அனுபமா குமார், இளவரசு

இசை:

சந்தோஷ் நாராயணன்

படத்தின் கதை

கதையின் ஆரம்பத்தில் கொடைக்கானலுக்கு தனது தோழி ஒருவரின் திருமணத்திற்கு செல்லும் மதி சன் செட் வியூ பாயிண்ட்டில் அதன் அழகை ரசித்தப்படியே நேரம் போனது கூட தெரியாமல் தனிமையில் பார்த்துக் கொண்டிருக்க திடீரென மயக்கமடைகிறார். அவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் பலாத்காரம் செய்கின்றனர்.

Anal mele panithuli movie review

அதாவது நடிகை மதி (ஆண்ட்ரியா) ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்சில்  சூப்பர்வைசராக   பணிபுரிகிறாள். அங்கே சேல்ஸ் கேர்ளாக பணிபுரியும் பெண்ணிற்கு, அவளது காதலனுடன் பிரேக்கப் ஆகிறது. முதலில் காதலித்தவள் பின் அவனது கேரக்டர் சரி இல்லாததால் காதல் வாழ்வை முடிவுக்குக்கொண்டு வர தீர்மானிக்கிறாள்.

ஆனால் காதலன் அவளை விடுவதில்லை. தொடர்ந்து  வந்து  டார்ச்சர்  செய்கிறான். நாயகி அந்தப்பணிப்பெண்ணை டார்ச்சர் செய்யும் அவளது  காதலனை எச்சரித்து அனுப்புகிறாள். இதனால் காதலன் நாயகி மேல் கோபமாக இருக்கிறான்.

இன்னொரு சம்பவம் அந்த காம்ப்ளெக்சில் பணிபுரியும் ஒரு ஆண் தன் நண்பன் உதவியுடன் ஒரு உடையை திட்டம் போட்டு திருடுகிறான். அதைக் கண்டுபிடித்து அவனை பணியில் இருந்து நீக்குகிறார் நாயகி. இதனால் அவனும் அவனது நண்பனும் நாயகி மீது கோபமாக இருக்கிறார்கள்.

Anal mele panithuli movie review

அவர்களாக இருக்கும் என்று ஆராய நடிகை முற்படுகிறாள் முன்னதாக பெண்களை தொல்லை கொடுத்த ஆண்கள் குற்றவாளிகளா? என்கிற கோணத்தில், அவர்களில் ஒருவன் கொடைக்கானல் வர அவனை பிடித்து விசாரிக்கின்றனர்.அவர்கள் இல்லை என்பதை ஆண்ட்ரியா புரிந்து கொள்கிறார்.

அந்த கொடுமைக்கு அவரை ஆளாக்கியவர்கள் யார்? மேலே சொன்ன சம்பவங்களில்  புதிதாய் முளைத்த அந்த எதிரிகளா? வேறு நபர்களா? இதற்குப்பின் நாயகியின் வாழ்வில் நடந்த திடுக்கிடும் சம்பவங்கள் என்ன? இதுதான் திரைக்கதை.

திறமையின் தேடல்

நாயகியாக ஆண்ட்ரியா. மனதில் தங்கிவிடும் அருமையான நடிப்பு. பணிபுரியும்  இடத்தில்  கம்பீரமாக நடந்து கொள்வது, பாதிக்கப்பட்ட  பின் அவரது உடல் மொழியில் மாற்றம், அவமானப்படுத்தப்படும்போது  அவரது உள்ளக்குமுறல்கள்  எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் .

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அழகம்பெருமாள் மாறுபட்ட நடிப்பை வழங்கி உள்ளார். போலீஸ் ஏட்டய்யாவாக வரும் இளவரசு மிரட்டி இருக்கிறார்.

Anal mele panithuli movie review

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பெண்ணும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  நாயகியின் காதலனாக ஆதவ் கண்ணதாசன் பொறுமையான நடிப்பை வழங்கியுள்ளார். 

வெற்றி மாறன் தான் இந்தப்படத்தை தயாரித்து இருக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் மனதில் தங்குகிறது. பின்னணி சையில போதுமான பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இயக்குனர் பெண்களுக்கான கதையை வேற லெவலில் தந்திருக்கிறார் இயக்குனர் ஆர். கைசர் ஆனந்த். வாழ்த்துக்கள் ஒரு பெண்ணின் கற்பழிப்புக்குப் பிந்தைய மன செயல்முறை வேகத்தை இழக்காமல் பாராட்டத்தக்க வகையில் எழுதப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னை கொடுமைக்கு ஆளாக்கிய ஆண்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை தத்ரூபமாக சொல்லும் படம். 

படத்தின் சிறப்பு

ஆழமான கதை

விழிப்புணர்வான கதை

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்

பிண்ணனி இசை, சந்தோஷ் நாராயணனின் இசை

Anal mele panithuli movie review

படத்தின் சொதப்பல்கள்

லோஜிக் மிஸ்டேக்

டப்பிங்

கிளைமேக்ஸ் காட்சியில்வசன காட்சிகள் பாடம் எடுப்பது போன்ற உணர்வு

மதிப்பீடு: 3.5/5

இது ஒரு படம் அல்ல பாடம். பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் தனது பாதுகாப்பிற்காக என்ற கதையை ரொம்ப அழகாக தந்திருக்கின்றனர். எல்லோருக்கும் போய் சேர வேண்டிய திரைப்படம்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts