செய்திகள் | கலை காட்சி கூடம்

தனது 18வது பிறந்தநாளை கொண்டாடும் அனிகா | Anika celebrates her 18th birthday

தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத் துறைகளில் பணிபுரிந்து வரும் அனிகா 2010 இல் கதை துடாருன்னு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, அவர் என்னை அறிந்தால், விஸ்வாசம் மற்றும் குயின் என்ற web series ஆகியவற்றில் நடித்தார்.நடிப்பிற்காக விருதுகள் பெற்றுள்ளார்.

Anika celebrates her 18th birthday

இவர் தற்போது புட்ட பொம்மா என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். இது கப்பேலா என்கிற மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில், நடிகை அனிகா நேற்று தனது 18-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அவர் ஹீரோயின் ஆன பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும். இந்த பிறந்தநாள் விழாவில் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கருப்பு நிற உடை அணிந்து வந்த அனிகா, பிரம்மாண்ட கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கேக்கில் 18 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar Posts