திருநங்கைகளுக்காக அனிதா சம்பத் செய்துள்ள காரியம்..!
பிக்பாஸ் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்றாலும் அனிதா பிக்பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் டைட்டில் வின்னராக மாறினார்.
சமீபத்தில் அனிதா சம்பத் திருநங்கைகளுக்கு இலவச மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செமினார் எடுத்துள்ளார். இதில் பல ஊர்களை சேர்ந்த திருநங்கைகளும் கலந்து கொண்டு இலவச பயிற்சி பெற்றுள்ளனர்.
இது குறித்த வீடியோ மற்றும் சில புகைப்படங்களை வெளியிட்டு,
திருநங்கைகளுக்காக நான் நடத்திய “TRANS-FORM” – FREE ONEDAY MAKEUP & HAIRSTYLE SEMINAR” வெற்றிகரமாக முடிந்தது. பலரின் உதவியோடு மட்டுமே இது சாத்தியம் ஆச்சு.அவங்க எல்லாருக்கும் என் பெரிய நன்றிகள். இதை தொடர்ச்சியா செய்யணும், மேலும் பல திருநங்கைகளுக்கு இது உதவணும்ங்குறது தான் எங்க எல்லாருடைய ஆசையும்.
திருநங்கைகளில் நேர்மையா உழைச்சு சம்பாதிச்சு சுயமா வாழ நினைக்கும் எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கணும் ங்குறதுதான் இந்த TRANS- FORM உடைய நோக்கம்
மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர்,கோவை-னு பல வெளியூர்கள்ல இருந்தும் நிறைய பேரு கலந்துக்கிட்டாங்க இதுல சில பேரு வெற்றிகரமா மேக்கப் கலைஞர்களா ஜெயிச்சாலும் அத விட பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்ல. என பதிவிட்டிருந்தார்.