சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அபர்ணா பாலமுரளி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.| Aparna Balamurali’s photo with Super Star Rajinikanth is going viral on social media.
மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான “யாத்ரா துடருன்னு” என்னும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர், 2016ல் “மஹேஷிண்டே பிரதிகாரம்” மற்றும் “சண்டே ஹாலிடே” என்னும் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் வாயிலாக மலையாள திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாகவும், பின்னணி பாடகராகவும் புகழ் பெற்றுள்ள இவர், 2017ம் ஆண்டு தமிழில் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் விமர்சன ரீதியா தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும்.

2017, ‘8 – தோட்டாக்கள்’ படத்தினை தொடர்ந்து இவர் தமிழில் 2019ம் ஆண்டு “சர்வம் தாள மையம்” திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்ற இவர், 2020ல் தமிழ் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று” படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.