செய்திகள்

சிவகார்த்திகேயனை வைத்து கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஏஆர் முருகதாகஸ் | AR Murugathas trying to make a comeback with Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகிவரும் நிலையில், தொடர்ந்து கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

மாவீரன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து, அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள அயலான் படமும் விரைவில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விரைவில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றபோதிலும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AR Murugathas trying to make a comeback with Sivakarthikeyan

கஜினி, துப்பாக்கி என கோலிவுட்டின் எவர்கிரீன் படங்களை கொடுத்த ஏஆர் முருகதாசின் இயக்கத்தில் வெளியான ரஜினியின் தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஏஆர் முருகதாகஸ் தற்போது ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் அவரது முந்தைய படங்களை போல மிகச்சிறந்த வெற்றியை பெற்றால், ஏஆர் முருகதாஸ் என்னும் வெற்றி இயக்குநரின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்.

l

Similar Posts