அறந்தாங்கி நிஷா தனது சகோதரனை வாழ்த்தி பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | The photos posted by Aranthangi Nisha congratulating her brother are going viral
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளார். எந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டரோ அதே நிகழ்ச்சியில் இன்று தொகுப்பாளராக பணியாற்றும் அளவிற்கு வளர்ந்ததற்கு அவரது கடின உழைப்பு மாத்திரமே காரணம்.

விஜய் டிவியால் கிடைத்த பிரபலம், இவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்த்தி சென்றது. ஒரு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவால் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

எதிலும் சாதிக்க திறமை இருந்தால் போதும், அழகு ஒரு பொருட்டே இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து, பலருக்கு எடுத்து காட்டாக இருந்து வருபவர் அறந்தாங்கி நிஷா.

எவ்வளவு தான் சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய குடும்பத்துடனும் நேரம் செலவழிக்க தவறாத அறந்தாங்கி நிஷா தற்பொழுது இன்று முதன் முறையாக தனது தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்த் தெரிவித்து அவருடைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதில் என் முதல் குழந்தை என் உடன் பிறந்தவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கேப்ஷனாக போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் வாழ்ததுக்களைத் தெரிவித்து வருகின்றனர்