‘ஐயோசாமி நீ எனக்கு வேணாம்’ பாடலின் பாடலாசிரியர் அஸ்மின் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்துள்ளார். | Asmin, the lyricist of the song ‘Ayyo Saami nee enakku Venam’ has teamed up with music composer Deva.
இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் அஸ்மின் அண்மையில் வெளிவந்து மிகவும் பிரபல்யம் அடைந்த ஐயோசாமி நீஎனக்குவேணாம் பாடலின் பல்லவிக்கு சொந்தமானவர். அந்த வகையில் அஸ்மின் தனது கனவு நனவாகியது என பதிவிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்
ஐயோசாமிநீஎனக்குவேணாம்பாடலின் பல்லவி முழுவதும் ஒரு வார்த்தை பிசகாமல் சொல்லிவிட்டு தேவா சார் அப்பாடல் குறித்து சிலாகித்துப் பேசியபோது நான்
அதிர்ந்து ,மகிழ்ந்து, நெகிழ்ந்து போனேன்… அருகில் அவரது சகோதரர்கள் சபேஸ் முரளியும் மகன் சிரிகாந்தேவாவும் கூட இருந்தனர்.

என்பாடல் குறித்து
தேவா சார் பாராட்டிப் பேசியதாக சிரிகாந்தேவா சொன்னபோது
ஏற்படாத உணர்வு பலர் முன்னிலையில் அவர் பாராட்டிப்பேசியபோது ஏற்பட்டது. நான் வியந்து பார்த்து, ரசித்த, இசையமைப்பாளர், பாடகர் துளி அளவும் ஈகோவும் இல்லாமல் பேசும்போது “மேன்மக்கள் என்றும் மேன்மக்களே” என்பதை உணர்ந்தேன்.

“நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்”,”வந்தேன்டா பால்காரன்”,”தண்ணி குடமெடுத்து பாடல்களை பாடசாலை மேசையில் தட்டிப்பாடிய பதின்ம பருவ நினைவலைகள் எனக்குள் வந்து போகின்றன. தேவாவின் கானப்பாடல்கள் அடங்கிய கெசட் அறுந்து பிஞ்சு போகும் வரைக்கும் போட்டு கேட்டு ஆட்டம்போட்டு ரசித்த என் இளைய காலங்கள் சில நொடிகளில் நினைவுக்கு வந்து போகிறது.

அவர் பேட்டிகளை பார்க்கும் போது இந்த நல்ல மனிதரை வாழ்நாளில் ஒரு தடவையாவது சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். காலம் எப்படி அற்புதமானது! அதிசயமானது! இன்று என் கனவு நிஜமானது! தேவா என்னும் மாபெரும் கலைஞரை நேரில் பார்ப்பதையும் தாண்டி இன்று அவரோடு இணைந்து பணிபுரிய கிடைத்தது நான் பெற்ற வரம். தேவாவின் ஹிட் பாடல்கள் வரிசையில் அவர் குரலில், சிரிகாந்தேவா இசையில், UK மாலா குமார் படைப்பகம் தயாரிப்பில் வெளிவரவுள்ள, பாடல் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்….

ஆம்! நம்பிக்கைதானே வாழ்க்கை! என பதிவிட்டுள்ளார்.