விஷம் வச்சு கொல்லப்பாத்தாங்க.. நடிகை தனுஸ்ரீ தத்தா பகீர் தகவல்(Attempts to poison..Actress Tanushree Dutta information)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தனுஸ்ரீ. இதன்பின் பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் இவர், வில்லன் நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் கூறிய புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் மீடூ புகார் கூறிய பின்னர் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாக கூறி உள்ளார்.
சமீபத்தில் உஜ்ஜயினியில் உள்ள கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்றபோது, பிரேக் செயலிழந்ததால் தான் விபத்தில் சிக்கியதாகவும், இது யாரோ செய்த சதி என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். அதுமட்டுமின்றி அவரை விஷம் வைத்து கொள்ளவும் முயற்சிகள் நடந்ததாக கூறி உள்ளார்.
