செய்திகள்

நடிப்பு திறமையுடன் விவசாயத்திலும் விருது..!

ஜெயராம் தமிழில் தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி, என பல படங்களில் நடித்திருக்கிறார். 

 பிஸியாக நடித்து வரும் ஜெயராம், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு மாட்டு பண்ணை வைத்திருக்கிறார். இதில் 60க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதோடு பல ஏக்கர் நிலங்களில் அவர் விவசாயமும் செய்து வருகிறார்.

இந்த நிலையில்கேரளா மாநில விவசாயத்துறை சார்பில் விவசாய தின விழா நடத்தப்பட்டது . விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயிக்காக விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயராம் , பத்மஸ்ரீ விருதை விட இந்த விவசாயி விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

Similar Posts