திரை முன்னோட்டம்

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் அயலி ட்ரெய்லர்..!(Ayali trailer directed by Muthukumar)

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘அயலி’. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8- ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய,

அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறார் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் வருகிற ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Ayali trailer

Similar Posts