செய்திகள்

அயாலி வெப் சீரிஸின் மைதிலியும் தமிழ்செல்வியும் ஒன்றாக சந்தித்துள்ளனர் | Ayali Web series’s Mythili and Tamilselvi meet together

சமீபத்தில் ஜி5 ஓடிடி-யில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படத்தை 1990 காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதை தத்ரூபமாக காட்டி உள்ளனர். இதில் மைதிலி என்ற கேரக்டரில் நடிகை லவ்லின் பக்கவாக செட் ஆகி நடித்திருந்தார்.

Ayali Web series’s Mythili and Tamilselvi meet together

வெளிநாட்டில் படித்து வந்த லவ்லின் கிராமத்து கெட்டப்பில் அசத்தலான நடிப்பை வெளிக்காட்டியது, அவருடைய குடும்பத்தையே ஆச்சரியப்படுத்தினார். 

கடவுள் பெயரைச் சொல்லி பெண் பிள்ளைகளை பருவமடைந்த உடனே திருமணம் செய்து வைக்கிறார்கள். மேலும் அத்துடன் அவர்களது படிப்பும் முடிவடைகிறது. எப்படி கிராமப்புறங்களில் கடவுள் நம்பிக்கையால் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை அயலி படம் கூறியுள்ளது.

இந்த அயலி தொடரில் மைதிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் லவ்வின் சந்திரசேகர், சினிமா வாரிசாக தான் நுழைந்துள்ளார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பட்டையை கிளப்பிய விஜி சந்திரசேகரின் மகள் தான் லவ்வின். பார்ப்பதற்கு அப்படியே அம்மாவை உரித்து வைத்துள்ளார்.

இந்நிலையில், அயாலி தொடரில் நடித்து பிரபலமான மற்றொரு நடிகை தான் தமிழ்செல்வி, தற்போது இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்து அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

Similar Posts