சசிகுமாரின் அயோத்தி திரைப்படம் திரைவிமர்சனம் | Sasikumar’s Ayothi Movie Review
சசிகுமாரின் அயோத்தி திரைப்படம் ‘மதத்தை விட மனித நேயமே முக்கியம்’ படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்

படக்குழு
இயக்கம்:
மந்திர மூர்த்தி
தயாரிப்பு:
ரவீந்திரன்
வெளியீடு:
முக்கிய கதாபாத்திரங்கள்:
சசி குமார்,யஷ்பால் ஷர்மா,ப்ரீத்தி அஸ்ராணி,புகழ் (விஜய் டிவி)
இசை:
என் ஆர் ரகுநாதன்
படத்தின் கதை
அயோத்தியில் இந்து மத நம்பிக்கையை பின்பற்றும் யாஷ்பால் சர்மா மிகவும் கண்டிப்பான கணவராகவும், தந்தையாகவும் உள்ளார். அயோத்திகில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை செல்ல திட்டமிடும் யாஷ்ப்பால், தன்னுடைய குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு வரும் வழியில் கார் டிரைவருடன் சண்டை போட நேருகிறது.

பின்னர் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த யாஷ்பால் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழக்கிறார். மனைவி பிணமானதை கூட கண்டு கொள்ளாமல், தன்னுடைய மதம் தான் தூக்கி பிடித்து பேசி, மத ரீதியாகவே இறுதிச் சடங்கு நடத்த வேண்டும். உடல்கூறாய்வு செய்ய கூடாது என மருத்துவர் மற்றும் காவல்துறையுடன் சண்டை போட்டு அயோத்திக்கு செல்ல தயாராகிறார்.

அதே நேரம் மொழி தெரியாத ஊரில், தாயை இழந்து அல்லாடிக் கொண்டிருக்கும் கதாநாயகியின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மனிதாபிமானத்தோடு உதவுவதற்காக வருகிறார் சசிகுமார். பல்வேறு சவால்களைத் தாண்டி கதாநாயகியின் இறந்த தாயின் உடலை எப்படி சசிகுமார் அயோத்திக்கு எடுத்துச் செல்கிறார் என்பதை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் கூறி உள்ளது இப்படம்.
படத்தின் சிறப்பு
அடிதடி சண்டை, நட்பு மற்றும் சொந்தங்களின் துரோகம் போன்ற தன் வழக்கமான பார்முலாவிலிருந்து விலகி, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யும் நடிகனாகத் தன்னை முன்னிறுத்தியிருக்கிறார் சசிகுமார்.
கதையின் நாயகியாக வரும் பிரீத்தி அஸ்ரானி தன் நடிப்பால் அசரடிக்கிறார்.
புகழ் காமெடி ஏரியா பக்கம் ஒதுங்காமல் ஒரு துணை நடிகராகத் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
யஷ்பால் சர்மாவின் மனைவியாக வரும் அஞ்சு அஸ்ரானி, மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் அத்வைத், போஸ் வெங்கட் என அனைவருமே மிகை நடிப்பில்லாமல் படத்துக்குத் தேவையானவற்றைச் செய்திருக்கின்றனர்.
படத்தின் சொதப்பல்கள்
படத்தில் அதிக ஹிந்தி வசனங்கள் வருகிறது
காவல் நிலையக் காட்சியில் திரைக்கதைக்கு இடைச்செருகலாக வரும் பாடல் ஆகிய குறைகளாக தெரிகின்றன.
மதிப்பீடு: 3.75/5
சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் மனிதத்தை உயர்த்திப்பிடித்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியிருக்கும் ‘அயோத்தி’ அனைவரும் ஆரத் தழுவி வரவேற்க வேண்டிய திரைப்படம்
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.