செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை பூர்ணா வெளியிட்ட வளைகாப்பு புகைப்படங்கள் | Baby shower photos released by actress Poorna

தமிழ் திரை உலகில் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்கிற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் பூர்ணா. கேரளாவில் பிறந்து வளர்ந்த இவரின் இயற்பெயர் சம்னா காசிம். திரைப்படங்களுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார்.

Baby shower photos released by actress Poorna

தமிழில் இவர் கொடைக்கானல், ஆடு புலி, வித்தகன், வேலூர் மாவட்டம், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அவரது தோழியாக வி கே சசிகலா கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் பூர்ணா.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபருடன் அவருக்கு திருமணம் நடந்திருந்தது. திருமணமாகி மூன்றே மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் வளைகாப்பு நடத்தியும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் பூர்ணா. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பூர்ணாவை வாழ்த்தி வருகின்றனர்.

Similar Posts