பிரபுதேவாவின் பஹீரா படத்தின் திரைவிமர்சம் | Prabhu Deva’s Bagheera Movie Review
பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘பகீரா’ படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு
இயக்கம்:
அத்விக் ரவிச்சந்திரன்
தயாரிப்பு:
ஆர்.வி. பரதன்
வெளியீடு:
ப.பாண்டியன், ஜி.சம்பத்
முக்கிய கதாபாத்திரங்கள்:
பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர், பிரகதி
இசை:
கணேசன் சேகர்
படத்தின் கதை
‘பஹீரா’ கதாபாத்திரத்தில் வரும் பிரபுதேவாதான் மொத்தத் திரைப்படத்திலும் நிறைந்திருக்கிறார். பெண் வேடம், மொட்டை வேடம் எனப் பல வேடங்கள் கட்டி, கொலை செய்கிறார். பிரபுதேவாவிற்கே உரிய நக்கலும், நடன பாணியிலான உடல்மொழியும் காமெடிக்கு உதவியிருக்கிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உணர்ச்சிகரமான இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார். பாடல் காட்சிகளிலும் தன் நடனத்தால் கவர்ந்திழுக்கிறார்.
பகீரா படத்தின் முதல் காட்சியிலேயே வாலிபர்கள் தங்களின் முன்னாள் காதலிகள் பற்றி குறை சொல்லும் யூடியூப் வீடியோக்கள் பலவற்றை பார்க்க முடிகிறது. அதை வைத்தே படம் எப்படி இருக்கப் போகிறது என்கிற ஐடியா படம் முற்று முழுதாக பார்ப்பதற்கு முன்னரே நம் மனதில் தோன்றி விடும்.

காதலில் துரோகம் செய்பவர்களாகச் சித்தரிக்கப்படும் பெண்கள், அவர்களைக் கரடி பொம்மைக் கொலையாளி கொடூரமாகக் கொலை செய்வது, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை முழித்துக்கொண்டிருப்பது, நான்கு பெண்களையும் பிரபுதேவா ஏமாற்றித் திருமணம் வரை கொண்டு செல்வது என நேர்த்தி இல்லாமல் ஒரு முழு படத்தை ஒரு மணி நேரத்தில் வேக வேகமாக ஓடவிட்டது போல இருக்கிறது முதற்பாதி. மீண்டும் மீண்டும் கொடூர முறையில் கொலை, அவற்றை வேண்டும் என்றே விகாரமாகத் திரையில் காட்டுவது, கொலைக்கான ஒரே காரணம் ‘பெண்ணின் நடத்தை’ என ஒரு கட்டத்தில் காட்சிகள் அலுப்புத்தட்ட வைக்கின்றன. ஒரு ‘கதாநாயகனால்’ கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உடலை, இவ்வளவு விகாரமாகக் காட்டுவதன் வழியாகப் பார்வையாளர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் இயக்குநர்?

அதுமட்டுமல்லாது படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சில கொலைகள் நடக்கிறதை பார்க்க முடிகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் பெரிய டெடி பொம்மை பரிசாகக் கிடைக்கிறது. அது அவர்கள் உடம்பில் கெமிக்கலை செலுத்தி கொலை செய்கிறது. அந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் ஆன நபர் பகீரா(பிரபுதேவா) என்பது பின்னர் தெரிய வருகிறது.
மேலும் பகீரா என்கிற பெயரில் ஒரு ஆப் கூட இருக்கிறது. பலபேருடன் உறவில் இருக்கும் தங்களின் காதலிகளின் புகைப்படங்களை வாலிபர்கள் அந்த ஆப்பில் அப்லோடு செய்தால் பகீரா வந்து அவர்களை உடனே கவனித்துக் கொள்வார்.

இவ்வாறு பெண்களால் ஏமாற்றப்படும் ஆண்களுக்காக பழிவாங்கும் ஒரு ஏஞ்சல் போன்ற கதாபாத்திரம் தான் பகீரா. இந்நிலையில் மனோதத்துவம் படிக்கும் மாணவியான ரம்யா (அமிரா தஸ்தூர்) வரும்போது எல்லாம் மாறுகிறது. அதாவது இலங்கையில் தனியார் விழாவில் பகீராவுடன் தனியாக மாட்டிக் கொள்கிறார் ரம்யா. இதனையடுத்து சைக்கோ பகீராவிடம் இருந்து ரம்யா தப்பிப்பாரா இல்லை பழியாகிவிடுவாரா? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.
படத்தின் சிறப்பு
கௌரவ வேடத்தில் மிகச் சிறிய பகுதியே வந்தாலும் ஶ்ரீகாந்த் தன் பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்
பிரபுதேவாவின் புதிய முயற்சி பாராட்டத்தக்கது
செல்வகுமாரும். கணேசன் சேகரின் இசையில் பாடல்கள் துள்ளலாக இருக்கிறது
பின்னணி இசை சில இடங்களில் நன்றாகவே இருக்கிறது.
படத்தின் சொதப்பல்கள்
பல ஆண்டுகளுக்கு முன்பே வர வேண்டிய ஒரு படமான பகீரா ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்து இருக்கிறது.
மதிப்பீடு: 2.5/5
இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தி படத்தை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.