நீ ஹீரோயின் மெட்டிரியல்டி என ரேகாவை வர்ணித்த பாரதி..!
இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரேகா நாயர். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில் இயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், “நான் பாரதிராஜா சாரை அவ்வப்போது பார்த்து பேசுவேன்.
அப்போதெல்லாம் அவர் என்னிடம் கேட்பது ஒன்றுதான், ஏன்டி நான்லாம் படம் பண்ணும்போது நீ இல்ல. அப்பல்லாம் ஏன் நீ என்னை வந்து பாக்கல. நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல்டின்னு சொல்வார்.
எனக்கு ஒரு 20 முதல் 25 வயசு வரை இருந்திருந்தால் நான் நிச்சயம் ஹீரோயின் ஆகிருப்பேன். இவ்வாறு அந்த பேட்டியில் பேசியுள்ளார் ரேகா நாயர்.
