செய்திகள்

விஜயுடன் நடிக்கவுள்ள பிக்பாஸ் பிரபலம் ஜனனி..!(Bigg Boss Janani to act with Vijay)

இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் “வாரிசு” பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

இதனை தொடர்ந்து விஜய் தன்னுடைய அடுத்த படமான 67 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி விட்டார். தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸில் கலந்துக் கொண்ட போட்டியாளரான‌ இலங்கையை சார்ந்த ஜனனி நடிக்கவுள்ளராம். இது குறித்து கூடிய விரைவில் படக்குழுவினர் செய்தியை ஊடகங்களுக்கு அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Bigg Boss Janani

Similar Posts