(மகளுக்கான அப்பாவின் போராட்டம்)பொம்மை நாயகி திரைவிமர்சனம்..!(Bommai Nayagi review)

தற்போது நடந்து வரும் சிறுவர் கொடுமைகள்.இப்படி ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமையை ஒரு அப்பாவாக எப்படி கையாளுவது, நீதி கேட்டுபோராடுவது என்ற ஒரு கதையை தான் திரைக்கு காட்டியுள்ளார் இயக்குநர் ஷான் வாங்க பார்க்கலாம் பொம்மை நாயகி கதை..
படக்குழு

இயக்கம்:
ஷான்
தயாரிப்பு:
பா. ரஞ்சித்
வெளியீடு:
நீலம் புரொடக்ஷன்ஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
யோகி பாபு,ஹரிகிருஷ்ணன் அன்புதுரை,
சுபத்ரா,ஸ்ரீமதி
இசை:
சுந்தரமூர்த்தி கே எஸ்
படத்தின் கதை
90களின் தொடக்கத்தில் நடக்கும் கதையாகும்.வேலு (யோகி பாபு) ஒரு சிறிய டீக்கடையில் டீ மாஸ்டர் ஆக வேலை செய்கிறார். வேலுவின் மனைவி கயல்விழி (சுபத்ரா)மற்றும் வேலுவின் மகளான 10 வயது சிறுமி பொம்மை நாயகி (ஸ்ரீமதி)மற்றும் வேலு ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.பணகஷ்டம் மன கஷ்டம் இருந்தாலும் சாதாரண ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இப்படியாக வாழ்க்கை போக, வேலு வேலைசெய்த டீக்கடை விற்கும் நிலமைக்கு போகிறது இந்தநேரம் வேலுவின் வேலையும் பறிபோகிறது.இதனால் சொந்தமாக ஒரு டீகடையை தொடங்க வேண்டும் என்ற முயற்சியில் வேலு ஈடுபடுகிறார்.இந்த சமயம் வேலுவின் ஊரில் கோவில் திருவிழா நடைபெறுகிறது இங்கு சென்ற வேலுவின் மகளான பொம்மை நாயகி காணமல் போகிறார்.

பொம்மை நாயகியை தேடி வேலு செல்லும் போது சில மேல் ஜாதி கயவர்களால் பொம்மை நாயகி துன்புறுத்தலுக்கு உற்படுத்தப்பட்டு மயங்கிய நிலயில் இருக்கிறார்.இதை கண்ட வேலு பொம்மை நாயகியை காப்பாற்றி,தன் மகளை இந்த நிலமைக்கு தள்ளியவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் வரை கொண்டு செல்கிறார்.இந்த உரிமை போராட்டத்தில் அவருக்கு நீதி கிடைத்ததா? மேல் ஜாதியினரின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதி கதை..
திறமையின் தேடல்
நகைச்சுவையை கொடுத்த யோகி பாபு இத் திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.இப் படத்தில் ஒரு அப்பாவாக தன் நடிப்பை காட்டியுள்ளார். தன் மகளுக்கு நடந்த அநீதிக்கு ஞாயம் கிடைக்க போராடும் அப்பாவாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அடுத்து பொம்மை நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீமதி என்ற குட்டி நட்சத்திரம் தனக்கு கொடுத்த பாத்திரத்தை மிக சிறப்பாக நடித்துள்ளார்.யோகிபாபுவின் மனைவியாக நடிக்கும் சுபத்ரா கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்.மற்றும் ஏனையோர் தங்களுக்கான பாத்திரப்படைப்பை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

படத்தின் சிறப்பு
கதை
பின்னணி இசை
கதாபாத்திரங்கள்
ஒளிப்பதிவு
படத்தின் சொதப்பல்கள்
பிற்பகுதி கதையில் சறுக்கல்
இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு இல்லை
மதிப்பீடு: 2.5/5
ஒரு கிராமத்தில் நடக்கும் அநீதிகளை எடுத்துக்காட்டியுள்ளது.மற்றும் அதனை எதிர் கொள்ளும் விதம் என்பவற்றை பிரதி பலிக்கின்றது பொம்மை நாயகி.குடும்ப திரைக்கதை.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.