அமலா பாலின் கடாவர் படத்தின் திரை விமர்சனம்
அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம் காடவர் அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்த்ல் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்

படக்குழு
இயக்கம்:
அனூப் பணிக்கர்
தயாரிப்பு:
அமலா பால்
வெளியீடு:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
முக்கிய கதாபாத்திரங்கள்:
அமலா பால், ரித்விகா, முனிஷ்காந்த், திருகன், ஹரிஷ் உத்தமன், அதுல்யா ரவி
இசை:
ரஞ்சின் ராஜ்
படத்தின் கதை
படத்தின் தொடக்கமே அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், திரிலிங் என்று ஆரம்பிக்கிறது. அப்போது பிரபல மருத்துவரான சலீம் ரகுமானை ஒரு மர்ம மனிதன் காரோடு வைத்து எரித்துக் மர்ம செய்து விடுகிறார். இது தொடர்பாக போலீஸ் விசாரிக்கிறது. இந்த கொலைக்கு சிறையில் இருக்கும் வெற்றிக்கும் தொடர் இருப்பது விசாரணையில் தெரிய வருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் இந்த கொலையை எப்படி செய்ய முடியும் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதை அமலா பால் போலீஸ் உடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த கொலையை செய்ய வெற்றிக்கு உதவிய மர்ம நபர் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் எந்த இடத்திலும் சலிப்பு இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார்.

மேலும், இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் அமலாபால் மிரட்டி இருக்கிறார் என்றே சொல்லலாம். இவர் இந்த படத்தின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். வித்தியாசமான பிணத்திற்கு நடுவில் அமலாபால் உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகள் எல்லாம் வேற லெவல் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக அமலாபாலுக்கு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிணங்கள், சவக்கிடங்கு, கொடூரமான கொலைகள் என ஒவ்வொரு நிமிடமும் திக் திக் பாணியிலேயே கதை சென்றுகொண்டிருக்கிறது. முதல்பாதியில் கொலைக்கான காரணம் எனப் புரியாமல் கதை நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

போலீஸுடன் கொலையாளியை தேடும் அமலாபால் இறுதியில் கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் சஸ்பென்ஸ். திரில்லிங்க்கு தேவையான காட்சிகளை இயக்குனர் கச்சிதமாக கொடுத்திருக்கிறார். காசு கொடுத்த சென்ற ரசிகர்களுக்கு அமலா கொடுத்திருக்கிறார். காசு கடவார் படம் ஓகே என்று சொல்லலாம்.
படத்தின் சிறப்பு
இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு. அமலாபாலின் நடிப்பு வேற லெவல். நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். பின்னணி இசை, ஒளிப்பதிவு பக்கபலமாக இருக்கிறது.
படத்தின் சொதப்பல்கள்
படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடு இருக்கிறது. மொத்த படமும் அமலாபால் தூக்கி சென்று இருக்கிறார். முதல்பாதி பார்வையாளர்களை குழப்பத்திற்கு தள்ளியிருக்கிறது. மற்றபடி பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு குறைகள் இல்லை. மொத்தத்தில் பெரிதாக திரில்லர் விரும்பிகளுக்கு கடாவர் – பக்கா விருந்து என்று சொல்லலாம்.
மதிப்பீடு: 3.0/5
படம் பாராட்டும் வகையில் உள்ளது, இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தி படத்தை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.