செய்திகள்

வீட்டுல சும்மா இருக்க இங்க வந்தும் சும்மா இரு,என அழைத்த ஆர்யா..!

சிம்புவின் காதல் அழிவதில்லை, அலை, மன்மதன், வல்லவன் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிப்பை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் சந்தானம்..!

கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளியான பிஸ்கோத், டகால்டி, சபாபதி, குலுகுலு ஆகிய திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

நமக்கு நடிப்பு வராது மீண்டும் காமெடி தான் சரிவரும் என வந்துள்ளார். தற்போது அதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று சென்னையில் நடந்த கேப்டன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் கலந்துகொண்ட சந்தானம், ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் நடித்தால் அதில் காமெடியனாக நடிக்க தயார் என கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுக்க சந்தானத்திற்கு போன் போட்ட ஆர்யா என்ன செய்யுற என கேட்டுள்ளார், இதற்கு வீட்ல சும்மா தான் இருக்கேன் என கூறி உள்ளார் சந்தானம். சரி இங்கயும் வந்து சும்மா இரு அப்டினு சொல்லி தான் தன்னை ஆர்யா அழைத்ததாகவும் நகைச்சுவையாக கூறினார் சந்தானம்.

Similar Posts