செய்திகள்

‘சின்ன கல்லு, பெத்த லாபம்’ பஞ்சதந்திரம் பட‌ நடிகர் மரணம்..!(‘Chinna Kallu, Petha Lapam’ Panchatanthiram movie actor dies)

2002ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் நடிகர் கைகலா சத்யநாராயணா பேசிய ‘சின்ன கல்லு, பெத்த லாபம்’ என்ற வசனம் மிகப் பிரபலம். கடைசியாக மகேஷ் பாபுவின் ‘மஹார்ஷி’ படத்தில் நடித்திருந்தார் இவர்.

கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான ‘சிப்பாயி கூத்துரு’ படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். இதுவரை 770க்கும் மேற்பட்ட படங்களில் சத்யநாராயணா நடித்துள்ளார்.

Panchatanthiram movie actor

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

இவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்சரண், நானி போன்ற பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Similar Posts